கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருச்சி: குறைதீர் முகாமில் முதியவர் மயங்கி விழுந்து சாவு

 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த குறைதீர் நாள் முகாமில், மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

DIN

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த குறைதீர் நாள் முகாமில், மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ரங்கநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ச. சீனிவாசன் (63). இவர், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்க்க நாள் முகாமில் மனு கொடுக்க வந்திருந்தார். 

அப்போது அவர், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது தொடர்பாக திருச்சி நீதிமன்ற காவல் நிலைய காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

பொறியாளர்கள் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

SCROLL FOR NEXT