முகப்பு
தமிழ்நாடு

கம்பத்தில் வ.உ.சி. பிறந்த நாள் விழா: மாலை அணிவித்து மரியாதை

தேனி மாவட்டம், கம்பத்தில் வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அனைத்து கட்சியினர், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On : 5 செப்டம்பர், 2023 at 1:45 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:41 PM

தேனி மாவட்டம், கம்பத்தில் வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அனைத்து கட்சியினர், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள வேளாளப் பெருமக்கள் சங்க கட்டடத்தில் வ.உ.சிதம்பரனார் முழு உருவ சிலை உள்ளது. இங்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்வின்போது மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரா.பாண்டியன், வடக்கு நகர செயலாளர் எம்.சி.வீரபாண்டியன் மற்றும் நகர, வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

அதிமுக சார்பில் நகர செயலாளர்கள் ஆர்.ஜெகதீஸ், வி.செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன் தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேலப்ப வேளாளர், ஆதிசக்தி வேளாளளர் சங்கம், கம்பராயப்பெருமாள் வேளாளளர் சங்கம், மத்திய சங்கம் சார்பில் மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.