முகப்பு
தமிழ்நாடு

ஓர் அமைச்சர் இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியுமா? ஜோதிமணி எம்.பி.

ஓர் அமைச்சர் இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியுமா? என கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் செ. ஜோதிமணி கேள்வி எழுப்பினார்.

Updated On : 6 செப்டம்பர், 2023 at 12:58 PM
ஜோதிமணி.
பகிர்:

புதுக்கோட்டை: ஓர் அமைச்சர் இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியுமா? என கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் செ. ஜோதிமணி கேள்வி எழுப்பினார்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:

இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தார் பிரதமர் மோடி. என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
 
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதாக சொல்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் ஏன் 2014ஆம் ஆண்டிலேயே ஏன் செய்யவில்லை. 

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்போது ஏன் இவற்றையெல்லாம் செய்யப்போவதாக பரப்புகிறார்கள். உண்மையில் மோடி தோல்வி முகத்தில் இருக்கிறார். அதனை மறைப்பதற்காகத்தான் இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள்.

வரும் கூட்டத்தொடரில் பாரத் பெயர் மாற்றும் தீர்மானத்தைக் கொண்டுவருவார்கள் என நான் நம்பவில்லை. அதற்கு நிறைய நடைமுறைகள் உள்ளன. அதற்குள் அழைப்பிதழ்களில் பாரத் எனப் போடத் தொடங்கிவிட்டனர். 

அதேபோல ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்வதே தவறு. ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிரச்னை இருக்கிறது. அதைப் பேசுவதற்கு கேட்பதற்கான வாய்ப்புதான் ஊராட்சித் தேர்தல். அதேபோல மாநிலத்துக்கு மாநிலம் பிரச்னைகள் இருக்கின்றன.

ஒரே தேர்தல் என்ற நடைமுறையில் பிரச்னைகளைப் பேச முடியாது. அதற்கான இடம் இருக்காது. ரூ.450 விற்ற சமையல் எரிவாயு, தற்போது ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிட்டது. ரூ. 50  விற்ற பெட்ரோல் நூறு ரூபாயைத் தாண்டிவிட்டது. மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

மக்கள் சமூகத்தில் சாதி ரீதியான, பாலின ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்பது எல்லோரும் அறிந்ததுதான். அந்த ஏற்றத்தாழ்வு பற்றி அமைச்சர் உதயநிதி பேசியிருக்கிறார். ஏன் பேசக் கூடாது? ஓர் அமைச்சர் இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியுமா?

ஆனால், அவ்வாறு ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் எனப் பேசிய அமைச்சரின் தலைக்கு சாமியார் ஒருவர் விலை வைக்கிறார் என்றால், மோடி தலைமையிலான அரசு ஆளும் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதைக் காணலாம் என்றார் ஜோதிமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.