தமிழ்நாடு

பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியம் எடுத்த முக்கிய முடிவு

வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு, செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு சென்னை குடிநீர் வாரியம் எந்தப் புதிய பணிகளையும் மேற்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


சென்னை: வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு, செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு சென்னை குடிநீர் வாரியம் எந்தப் புதிய பணிகளையும் மேற்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு சென்னையின் எந்த சாலைகளிலும், சென்னை குடிநீர் வாரியம் எந்தப் புதிய பணிகளையும் தொடங்காது என்றும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அதன் செயல் இயக்குநர் அறிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிகல், குடிநீர் இணைப்புகளை ஏற்படுத்துவது, கழிவுநீர் அகற்றுவதற்கான கால்வாய்களை கட்டுவது போன்ற பணிகளை சென்னை பெருமாநகர குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நேரத்தில் இப்பணிகள் நடைபெற்று வந்தால், நடந்து செல்வோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படும் என்பதால், செப்டம்பர் 15ஆம் தேதியுடன் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சாலையோரம் பள்ளங்களைத் தோண்டி, அதில் மழைநீர் தேங்கும்போது எதிர்பாராத விபத்துகள் நேரிடுவதும் கடந்தகால அனுபவங்களாக இருக்கும் நிலையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை தேன்.. நடிகை ஆஸ்தா

வாஷிங்டன் சுந்தர் அதிரடி: ஆஸியை வென்றது இந்தியா!

எல்விஎம் -3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

காகித பூ... அனன்யா நாகல்லா

கவிதைபேசுதே.. பிரியங்கா கோல்கடே

SCROLL FOR NEXT