தமிழ்நாடு

சிங்காநல்லூரில் கடைக்குள் புகுந்த கார்! இருவர் படுகாயம்

கோவை சிங்காநல்லூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டதில் இருவர் படுகாயமடைந்தனர்.

DIN

கோவை சிங்காநல்லூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டதில் இருவர் படுகாயமடைந்தனர்.

சூலூரைச் சேர்ந்த சூரியகுமார், கத்தார் நாட்டில் ஐ.டி. என்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். விடுமுறை என்பதால் சூலூருக்கு வந்த சூரியகுமார், சூலூரில் இருந்து சிங்காநல்லூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது பிரேக் பிடிப்பதற்கு பதில் தவறுதலாக எக்ஸலேட்டரை அழுத்தியதாகத் தெரிகிறது. 

இதில் நிலை தடுமாறிய கார், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தினேஷ்குமார் (23) என்பவர் மீதும், சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சிந்துஜா (23) என்பவரது மீதும் மோதி பின்னர் சாலையோரம் இருந்த கடையில் மோதி நின்றது.

இதில் விபத்தில் சிக்கிய இருவரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை மீட்ட பொதுமக்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காரை மீட்டு, சூரியகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சிங்காநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT