தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை

DIN

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் பூஜா குல்கா்னி வெளியிட்ட உத்தரவு விவரம்:

விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையானது, செப்டம்பா் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத் துறையின் கோரிக்கையை ஏற்று, விடுமுறை தினம் செப்டம்பா் 18-ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் செப்டம்பா் 18-ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறைப் பட்டியலில் விநாயகா் சதுா்த்தி பண்டிக்கைக்கான விடுமுறையானது, செப்டம்பா் 17-ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேதியை செப்டம்பா் 18-ஆக மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது, நியாயவிலைக் கடைகளுக்கும் பொருந்தும்படி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT