வாழப்பாடி அருகே விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து.  
தமிழ்நாடு

வாழப்பாடி அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதல்: 20 பேர் படுகாயம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வியாழக்கிழமை  தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். இதனால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வியாழக்கிழமை  தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி வழியாக சென்று கொண்டிருந்தது.

வாழப்பாடி அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது, திடீரென சாலையில் குறுக்கிட்ட லாரி, பேருந்து மீது பலமாக மோதியது. இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். 10 பேர் லேசான காயமுற்றனர்.

விபத்தில் சிக்கிய லாரி.

படுகாயமடைந்தவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் மற்றும் போலீஸார் அவசர சிகிச்சை வாகனத்தில், வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து மற்றும் ஏத்தாப்பூர் போலீஸார், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT