தமிழ்நாடும், கேரளமும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கேரளா மீடியா அகாதெமி, சென்னை மலையாளி சங்கத்தின் ஊடக சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் தி சேஞ்சிங் மீடியாஸ்கேப் என்ற புத்தகம், ஆவணப்படத்தை முதல்வர் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நாம் அனைவரும் திராவிட மொழி எனும் ஒரே மொழி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஊடகத்துறையினரை உருவாக்குவதில் மலையாள அகாதெமி சிறப்பான பங்காற்றுகிறது.
தற்போது ஏராளமான பெண் பத்திரிகையாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். சமத்துவத்துக்கு எதிரான உள்ளவர்களுக்கு திராவிடம் என்ற சொல் புடிக்காது. எரிச்சலை ஏற்படுத்தும்.
தமிழ்நாடும் கேரளமும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல செயல்பட்டு இந்தியாவுக்கு விடியலைத் தர வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்து வந்துள்ளது. சமூக நீதியை சிலர் சிதைக்கப் பார்க்கின்றனர்.
அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார் என முதல்வர் விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.