ரூ.100-க்கு நாள் முழுவதும் பயணிக்கலாம்! மெட்ரோவில் அதிரடி சலுகை!!
சென்னை மெட்ரோவில் ரூ.100 மூலம் செலுத்துவதன் மூலம் நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோவில் ரூ.100 மூலம் செலுத்துவதன் மூலம் நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்மூலம், ஒருநாள் முழுக்க பயணம் செய்யும் சுற்றுலா அட்டை கட்டணம் ரூ.150 என நிர்ணையிக்கப்படுகிறது. இதில், ரூ.50 வைப்புத்தொகையாக கருதப்படும்.
சுற்றுலா அட்டை ஒருநாள் மட்டுமே செல்லும் என்றும் அட்டையை ஒப்படைத்தவுடன் ரூ.50 வைப்புத்தொகை பயணிகளிடம் திருப்பி அளிக்கப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
வார நாள்களிலும், வார இறுதி நாள்களில் சிறப்பு சலுகையை பயன்படுத்தி நாள் முழுவதும் மெட்ரோவில் பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.