தமிழ்நாடு

கூடங்குளம் அணுஉலைக்கு ஜெனரேட்டர் ஏற்றிவந்த மிதவை படகு  தரைதட்டியது!

திருநெல்வேலி, கூடங்குளம் அணுஉலைகளுக்கு ஜெனரேட்டர் ஏற்றிவந்த மிதவை படகு அணுஉலை அருகே தரைதட்டி நின்றது.மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

திருநெல்வேலி, கூடங்குளம் அணுஉலைகளுக்கு ஜெனரேட்டர் ஏற்றிவந்த மிதவை படகு அணுஉலை அருகே தரைதட்டி நின்றது.மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடங்குளத்தில் ரஷிய தொழில்நுட்பத்தில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர 3 மற்று 4 அணுஉலை கட்டுமானப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது. மேலும் 5 மற்றும் 6 அணுஉலைகளுக்கு கட்டுமானப்பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது. இந்த 5 மற்றும் 6 அணு உலைகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தக்கூடிய இரண்டு ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து  தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து மிதவை படகில்(பார்ஜ்) கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ள சிறிய துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. துறைமுகத்தில் நிறுத்துவதற்காக மிதவை படகைக் கயிறு மூலம் இழுக்கும்போது கயிறு அறுந்து விட்டது. இதனையடுத்து மிதவை படகு அங்குள்ள பாறையில் தட்டி நின்றது.இதனையடுத்து ஜெனரேட்டர்களை இறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கனா... ரணாவத்!

கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி: அண்ணாமலை

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்தது: டிரம்ப்

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஆயிஷா! வைல்டு கார்டு என்ட்ரி!

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT