கோப்புப்படம் 
தமிழ்நாடு

கடலில் தவறி விழுந்து தூத்துக்குடி மீனவர் பலி

கடலில் தவறி விழுந்து தூத்துக்குடி மீனவர் பலியானார்.

DIN

தூத்துக்குடி: கடலில் தவறி விழுந்து தூத்துக்குடி மீனவர் பலியானார்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த தேவதாஸ் என்ற மீனவருக்கு சொந்தமான படகில் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பதற்காக ஜவகர் உள்ளிட்ட 8 மீனவர்கள் நாட்டுப் படகில் கடந்த 7ஆம் தேதி சென்றனராம். 

இந்நிலையில் சனிக்கிழமை இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில்  மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, பலத்த காற்று காரணமாக படகிலிருந்து ஜவகர் கடலுக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் கடலில் தத்தளித்த ஜவகர் மூச்சுத் திணறி பலியானார்.  இதையடுத்து பலியான ஜவகரின் சடலத்தை சக மீனவர்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்‌.  

இதைத் தொடர்ந்து  பலியான மீனவர் ஜவகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT