திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள ரத்னத்தின் வீடு. 
தமிழ்நாடு

திண்டுக்கல்லில் மணல் ஒப்பந்ததாரர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை

திண்டுக்கல்லில் மணல் ஒப்பந்தக்காரர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

திண்டுக்கல்லில் மணல் ஒப்பந்ததாரர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த குவாரி ஒப்பந்ததாரர் எஸ். ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் மட்டுமின்றி அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அமலாக்க துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் திண்டுக்கல்லில் உள்ள  ராமச்சந்திரனின் உறவினரும், மணல் ஒப்பந்ததாரருமான ரத்தினம் வீடு, அவரது மைத்துனர் கோவிந்தன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர். 

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள ரத்தினத்தின் வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய அதிரடி படை காவல் துறையினரின் துணையுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல் திண்டுக்கல் எம்ஜிஆர் காலனி அடுத்துள்ள ஹனிபா நகரில் அமைந்துள்ள ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வீட்டிலும் அமலாக்க துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.

ரத்தினத்துக்கு சொந்தமான அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச.17-ல் வேலூருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வருகை! ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் தியான மண்டபம் திறப்பு!

அமெரிக்க சந்தையில் குவியும் இந்திய அரிசி: நடவடிக்கை எடுக்க இருப்பதாக டிரம்ப் அறிவிப்பு!

வங்கியில் பெண் விட்டுச்சென்ற ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்கம் – போலீஸ் தீவிர விசாரணை!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

‘ஸ்கரப் டைபஸ்’ பாதிப்பு அச்சுறுத்தல்: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு!

SCROLL FOR NEXT