ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி குளறுபடி: கூடுதல் டிக்கெட் விற்பனையே காரணம்!
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 400 பாதுகாவலர்களையும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக ஏசிடிசி நிறுவனம் காவல்துறைக்கு அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்திய ஏசிடிசி நிறுவனம் 20 ஆயிரம் இருக்கைகளுக்கு மட்டுமே காவல்துறையிடம் அனுமதி பெற்றுள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 400 பாதுகாவலர்களையும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக ஏசிடிசி நிறுவனம் காவல்துறைக்கு அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் இதற்கு மாறாக அனைத்தும் நடந்துள்ளது. 20 ஆயிரம் பேருக்கு அனுமதி பெற்ற 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
மேலும் டிக்கெட் விற்பனை செய்தது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காததால், குறைவான காவலர்கள் பணியாற்றியதால் பிரச்னை பெரிதாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியாா் நிறுவனம் ‘ வாகன நிறுத்துமிடம்’ வசதி, இருக்கை வசதி ஆகியவற்றை முறையாக மேற்கொள்ளவில்லை.
டிக்கெட்’ இருந்தும் இருக்கைகள் இருந்தும், நிகழ்ச்சி நடைபெற்ற திடலுக்கு வெளியே இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல, வாகன நிறுத்துமிட வசதி செய்யப்படாததால், கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் காவல் துறையினர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிக்கை சமர்பிக்குமாறு கேட்டுள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.