முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி!

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதித்து கல்லூரி மாணவி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
பகிர்:

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதித்து கல்லூரி மாணவி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகியுள்ளது. கிட்டத்தட்ட இந்த காய்ச்சலுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி(19). டெங்கு காய்ச்சல் பாதித்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசு புழுவின் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

முழு கட்டுரையைப் படிக்க →