கோப்புப்படம் 
தமிழ்நாடு

9 ஆண்டுகளுக்கு பின்னர் பாணத் தீர்த்தத்தைப் பார்வையிட அனுமதி: வனத்துறை அறிவிப்பு

பாணத்தீர்த்த  அருவியை 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகிற 18 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கி புலிகள் காப்பக துணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

DIN

அம்பாசமுத்திரம்: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பாபநாசத்திற்கு மேல் அமைந்துள்ள பாணத்தீர்த்த  அருவியை 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகிற 18 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கி புலிகள் காப்பக துணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் மணிமுத்தாறு, மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்கள், அகஸ்தியர் அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், காரையாறு அணை, சேர்வலாறு அணை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின் சுற்றுலா செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சேர்வலாறு அணை மற்றும் காரையாறு அணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடைவிதிக்கப்பட்டது. காரையாறு அணையில் செயல்பட்டு வந்த படகு சவாரியும் நிறுத்தப்பட்டு பாணத்தீர்த்த அருவியில் குளிக்கவோ, பார்வையிடவோ முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து காரையாறு அணையில் படகுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கி பாணத் தீர்த்த அருவிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், காரையாறு அணைக்குச் செல்ல அனுமதிப்பதோடு, 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் வனத்துறை வாகனத்தில் சாலை வழியாக பாணத்தீர்த்தம் அருவியைப் பார்வையிட அனுமதித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் துணை இயக்குநர் செண்பகப்ரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   

வாகனத்தில் சென்று பாணத்தீர்த்தம் அருவியைப் பார்வையிட்டு திரும்புவதற்கு ஒரு நபருக்கு ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் திங்கள்கிழமை முதல் (செப். 18) சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT