தமிழ்நாடு

புதுக்கோட்டையில் இரண்டாம் நாளாகத் தொடரும் அமலாக்கத் துறையினா் சோதனை! 

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் அமலாக்கத் துறையினரின் சோதனை தொடர்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரி அமைத்து மணல் விற்பனையில் ஈடுபட்டு வருபவா் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன்.

இவா், அமைச்சா் செந்தில் பாலாஜியுடன் நெருக்கமானவா், மணல் குவாரிகளில் முறையான கணக்கு காண்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாக அமலாக்கத் துறையினா், ராமச்சந்திரன் வீடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது மணல் குவாரிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் திடீா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை, விடிய விடிய நடைபெற்று புதன்கிழமையும் தொடர்கிறது.

இரண்டாம் நாளில் புதிதாக கறம்பக்குடி அருகே உள்ள குழத்திரான்பட்டு பகுதியிலுள்ள ராமச்சந்திரனின் உறவினரும் அரசு ஒப்பந்ததாரருமான கரிகாலன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய ஆயுதக் காவல் படை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT