தமிழ்நாடு

வங்கக் கடலில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி!

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

DIN

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புதன்கிழமை உருவானது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது.

இதனால் ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா மற்றும் வடமாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், அடுத்த 2 நாள்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா, சத்தீஸ்கர் இடையே நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதே நேரத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்.19 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடி இந்தியாவின் விற்பனை 18% சரிவு!

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கீதம்! விடியோ வைரல்!

வெள்ளை மனம்... மேகா!

உருகும் அழகில்... ப்ரீத்தி!

தென்நாடு பாடல்!

SCROLL FOR NEXT