தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களில் 4 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களில் 4 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு இறங்குதளத்தில் இருந்து 163 விசைப்படகுகள் புதன்கிழமை மாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 

இதில், செந்தில் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற அருண், மருது, சுந்தரம், செல்வராஜ் ஆகிய 4 மீனவர்களும் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 4 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருச்சிக ராசிக்கு முன்னேற்றம்: தினப்பலன்கள்!

உணவகத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

‘இண்டி’ கூட்டணி காலத்தின் தேவை: தொல்.திருமாவளவன்

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: பிப். 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

வரும் பேரவைத் தோ்தலில் நானும் போட்டி: சீமான் அறிவிப்பு

SCROLL FOR NEXT