முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மணல் திண்ணும் போராட்டம்!

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் விவசாயிகளுக்கு உணவு இல்லாமல் செய்துவிட்ட மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மணல் திண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 15 செப்டம்பர், 2023 at 1:17 PM
திருச்சியில் அரை நிர்வாணத்துடன் மணல் திண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
பகிர்:

திருச்சி: திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் விவசாயிகளுக்கு உணவு இல்லாமல் செய்துவிட்ட மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மணல் திண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருச்சியில்  44 -ஆவது நாளாக விவசாயிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு நல்ல புத்தியைக்கொடு, மேலோகத்தில் இருந்து தமிழக விவசாயிகளுக்கு நல்லதை செய்து கொடு, லாபகரமான விலை கிடைக்க வழிவகை செய்து கொடுங்கள் எனக்கோரி திருச்சி சிந்தாமணியில் அண்ணா சிலைக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Advertisement

அதன் தொடர்ச்சியாக அண்ணா சிலை அருகில் விவசாயிகளுக்கு உணவு இல்லாமல் செய்துவிட்ட மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், விவசாயிகளை சோற்றுக்குக் கூட வழியில்லாத நிலைக்கு இரு அரசுகளும் தள்ளிவிட்டதால் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மணல் திண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் விவசாயிகளின் நிலை உணர்ந்து உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பு அளிக்கும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படாது என நம்புவதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.