தமிழ்நாடு

முறப்பநாடு விஏஓ கொலை: குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

DIN

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ் (55) கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பணியில் இருந்தபோது மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.  மணல் கொள்ளையை தடுத்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. 

இந்த கொலை தொடா்பாக, கலியாவூரைச் சோ்ந்த ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு (41), முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் முறப்பநாடு போலீஸாா் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனா். 

கொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ்

இது தொடர்பான வழக்கில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை தினமும் மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மே மாதம் உத்தரவிட்டது. 

அதன்படி, விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிகள் ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

SCROLL FOR NEXT