மேட்டூர் அணை நீர்வரத்து 2047 கனஅடி!
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,047 கன அடியாக குறைந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,047 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 42.49 அடியிலிருந்து 41.76 அடியாக சரிந்தது.
இதையும் படிக்க | மகளிா் உரிமைத் தொகையை கபளீகரம் செய்த வங்கிகள்: ரூ.1,000 பறிபோனதால் தவித்த பயனாளிகள்
Advertisement
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,707 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,047 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 13.01 டிஎம்சியாக உள்ளது. மழையளவு 28.40 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.