கணவர் இருக்கும்போதே, விதவைக்கான உதவித் தொகையை பெண்கள் பெற்று வருவதாக ஜார்க்கண்ட்டில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல்வரின் விதவைப் பெண்களுக்கான நிதித் திட்டத்தின் கீழ் 12 பெண்கள், உதவித் தொகை பெறுவதாகவும், அவர்களது கணவர்கள் உயிரோடு இருக்கும்போதே இந்த உதவியை பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டு புகார் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்நிலையத்தில் மண்டல மேம்பாட்டு அதிகாரி புகார் கொடுத்திருக்கிறார். ஆண்டுதோறும் நேரில் ஆய்வு செய்தபோது இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. மகளிா் உரிமைத் தொகையை கபளீகரம் செய்த வங்கிகள்: ரூ.1,000 பறிபோனதால் தவித்த பயனாளிகள்
போலி ஆவணங்களைக் கொடுத்து, 12 பெண்களும் கணவர் உயிரோடு இருக்கும்போதே விதவைக்கான உதவித்தொகையை பெற்றிருக்கிறார்களா என்று சோதித்தபோது, எந்த ஆவணமும் இன்றி அவர்கள் பெயர்கள் நேரடியாக பயனாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூலம், கிட்டத்தட்ட ரூ.1,04,000 முறைகேடாக பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.