சீமான்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

வழக்கு வாபஸ் பெற்றாலும் சீமான் ஆஜராக வேண்டும்: காவல்துறை

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக்கொண்டு பெங்களூருக்கு செல்ல உள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

DIN

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை திரும்பப் பெற்றாலும் கூட, வழக்கு விசாரணைக்கு சீமான் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது பாலியல் வன்கொடுமை வழக்கு என்பதால், சட்ட நிபுணர்களிடம் கலந்தாலோசனை செய்த பிறகே, வழக்கு வாபஸ் பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக்கொண்டு பெங்களூருக்கு செல்ல உள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சீமான் மீது கொடுத்த வழக்கு நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்று பெங்களூருக்கு செல்ல உள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து புகாரை வாபஸ் பெற்றார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி சீமான் மீது புகாரை வாபஸ் பெற வந்தேன். யாரும் அச்சுறுத்தல் பேரிலோ அல்லது தூண்டலின் பேரிலோ இந்த வழக்கை தான் வாபஸ் பெறவில்லை எனவும் தன்னுடைய சொந்த கருத்து ரீதியில் வேறு வழி இன்றி வாபஸ் பெற்றதாகவும், அருகில் இருந்த சீமானையே  காவல்துறை ஒன்றும் செய்ய முடியாததாலும், கைது நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை என்றும் மனவேதனையுடனும் தெரிவித்தார்.

மேலும், தான் தங்கும் இடத்தில் தன்னால் இருக்க முடியவில்லை எனவும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் செல்போனும் பயன்படுத்த முடியவில்லை எனவும் மேலும் தற்போது இந்த வழக்கை வாபஸ் பெற்று தான் பெங்களூருக்கு  செல்ல உள்ளதாகவும் நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீரில் பிரசவம்...

ஒரு கோயில்: இரு நாடுகளின் சண்டை

பெண்கள் அழகாய் இருக்க..

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

SCROLL FOR NEXT