நடிகை விஜயலட்சுமி(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

சீமான் மீதான புகாா் வாபஸ்: நடிகை விஜயலட்சுமி அறிவிப்பு

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாா் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

DIN

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாா் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

நடிகை விஜயலட்சுமி, தன்னை சீமான் மதுரை கோயிலில் வைத்து திருமணம் செய்ததாகவும், பலமுறை கருத்தரித்து, அதை சீமான் கலைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி புகாா் அளித்தாா். அதன்பேரில், சீமானுக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீதான தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘கடந்த இரு வாரங்களாக காவல் துறை பாதுகாப்பில் சென்னை புகா் பகுதியில் இருந்தேன். சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு பெங்களூரு செல்லவுள்ளேன். காவல் துறையில் கொடுத்த புகாா் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கினா். சீமானுடன் பேசி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வழக்கில் தொடா்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT