தமிழகத்தின் அனைத்துகட்சி எம்.பி.க்கள் குழு, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை காலை 10 மணியளவில் தில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக இந்த பயணம் அமையவுள்ளது. தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரி மத்திய அமைச்சரிடம் எம்.பி.க்கள் வலியுறுத்தவுள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் வரும் செப்.18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வரும் 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், வரும் 18 ஆம் தேதி காவிரி மேலாண்மை கூடுகிறது.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக எம்.பி.க்கள் குழு தில்லி விரைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.