பொதுமக்களுக்கு கந்தூரி உணவு வழங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர் கீதா ஆ.மைக்கேல்ராஜ், கந்தூரி கமிட்டியினர் மற்றும் ஜமாத்தார்கள் 
தமிழ்நாடு

மதநல்லிணக்க கந்தூரி விழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு களைந்து எல்லாரும் ஒரே நேரம், ஒரே உணவினை எடுத்துக்கொள்ளும் வகையில் நபிகளின் பிறந்த நாளை முன்னிட்டு இவ்விழா நடைபெற்றது.

DIN

மணப்பாறை : திருச்சி மாவட்டம் மணப்பாறை  பெரிய பள்ளிவாசல் மற்றும் முஹம்மதியா (உசேன் மஸ்தான்) பள்ளிவாசல் கந்தூரி கமிட்டியினர் மற்றும் ஜமாத்தார்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மதநல்லிணக்க கந்தூரி விழா. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கந்தூரி உணவு பெற்றனர்.

ஊர் முழுமவதும் ஒற்றுமையுடனும், சமாதானமும், அன்பும் நிறைந்து கிடைக்க பெறும் வகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சுமார் 80 ஆண்டு பழமை வாய்ந்த ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் முஹம்மதியா (உசேன் மஸ்தான்) பள்ளிவாசலில் கந்தூரி கமிட்டியினர் மற்றும் ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற மதநல்லிணக்க கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு களைந்து எல்லாரும் ஒரே நேரம், ஒரே உணவினை எடுத்துக்கொள்ளும் வகையில் நபிகளின் பிறந்த நாளை முன்னிட்டு இவ்விழா நடைபெற்றது.

கமிட்டி தலைவர் மகாராஜா பக்ருதீன் தலைமையில் நடைபெற்ற கந்தூரி உணவு வழங்கும் நிகழ்ச்சியினை மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா ஆ.மைக்கேல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்களுக்கு கந்தூரி உணவு வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

இதில் ஏழை, பணக்காரன், சாதி, மதம் என்ற பாகுபாடு களைந்து ஆயிரக்கணக்கானோர் கந்தூரி உணவினை பெற்று சென்றனர்.

நிகழ்வில் முகமது ஹனிஃபா, எஸ்.எஸ்.எம். சாகுல்ஹமீது, உபயத்துல்லா, சித்திக் பிளாஸ்டிக் கனி, நஜீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளிவாசல் கந்தூரி கமிட்டியினர் மற்றும் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு

சிவப்பு கம்பள வரவேற்பு... பிரணிதா!

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

21 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT