கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீடு 
தமிழ்நாடு

விராலிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளை

விராலிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ஐந்தாயிரம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

DIN


விராலிமலை: விராலிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ஐந்தாயிரம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் ஜோஸ் விக்டர். வெல்டிங் பட்டறை தொழில் செய்து வரும் இவர் சனிக்கிழமை வேளாங்கண்ணி கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த ஜோஸ் விக்டர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளிருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளிருந்து 10 பவுன் நகை மற்றும் ரூ.5000 ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து ஜோஸ் விக்டர் புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT