தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

DIN

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி,  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். 

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையடுத்து தமிழ்நாட்டில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர், பருவமழை காலத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பேரிடர் குறித்த தகவல்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

மேலும், நிவாரண முகாம்களில் தேவையான வசதி உள்ளதை ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழுக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும், சேதமடைந்த சாலைகளை விரைவில் சரி செய்ய வேண்டும், மழை நீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT