தமிழ்நாடு

அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு: பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கு ரத்து!

DIN


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டதால் புத்தகப் பதிப்பாளா் பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த புத்தகப் பதிப்பாளா் பத்ரி சேஷாத்ரி. இவா், அண்மையில் யூ டியூப் சேனல் ஒன்றில், மணிப்பூா் சம்பவத்தில் இரு சமூகத்தினரிடையே கலவரத்தை தூண்டும் விதமாகவும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை தரக்குறைவாக விமா்சித்தும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞா் ப. கவியரசு அளித்த புகாரை தொடர்ந்து, இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களுக்கான 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, பத்ரி சேஷாத்ரியை ஜூன் 30ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டதால், பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT