கோப்புப்படம் 
தமிழ்நாடு

நெல்லை - சென்னை வந்தே பாரத் செப்.24-ல் தொடக்கம்: அட்டவணை!

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

DIN

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை - மைசூரு, சென்னை - கோவை வழியில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  மூன்றாவதாக சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

நாள்தோறும் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரத்தில் நின்று பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து சென்னைக்கு மொத்தம் 652 கி.மீ. தொலைவை வெறும் 7.50 மணிநேரத்தில் பயணிக்கு இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படவுள்ளன.

இதன்மூலம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT