கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுக - பாஜக இடையே பிரச்னையில்லை: அண்ணாமலை 

அதிமுக மற்றும் பாஜக இடையே பிரச்னை ஏதுமில்லை என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

DIN

அதிமுக மற்றும் பாஜக இடையே பிரச்னை ஏதுமில்லை என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது:

எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். தன்மானம் எனக்கு முக்கியம். அதிமுக மற்றும் பாஜக இடையே பிரச்னை ஏதுமில்லை. எனக்கு யாருடன் எந்த பிரச்னையும் இல்லை. யாரையும் நான் தவறாக பேசவில்லை. 

கூட்டணி தொடர்பாக அதிமுக பேசிய கருத்துகளுக்கு நான் பதிலளிக்க முடியாது. பிரதமர் மோடியை ஆதரிப்பவர்களை நானும் ஆதரிப்பேன். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. 

அறிஞர் அண்ணாவை நான் ஒருபோதும் எதிர்த்ததோ, விமரிசித்ததோ இல்லை. எனக்கும் அதிமுக தலைவர்களுக்கும் தனிப்பட்ட எந்த பிரச்னையும் இல்லை. நாளை அதிமுக தலைவர்களை பார்க்கும்போது மரியாதையோடு பழகுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த நிலையில், அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏமாறாதீர்கள்! போலி கிரிப்டோ வர்த்தக மோசடி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!

அரசியல் ஆதாயம் தேடும் கட்சி திமுக: ராஜேந்திர பாலாஜி

தமிழில் பயண இலக்கியம்

இதுபோன்ற சம்பவம் என்னை ஒருபோதும் பாதிக்காது: பி.ஆர். கவாய்!

SCROLL FOR NEXT