கோப்புப் படம் 
தமிழ்நாடு

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிவித்திருந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை(செப்.25) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

DIN


சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிவித்திருந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை(செப்.25) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு, அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் இடையே நடைபெற்றும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT