தமிழ்நாடு

குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளி: நோட்டீஸ் ஒட்டிய சிபிசிஐடி

வெப்பேரி காவல்நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தி, நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

DIN

வெப்பேரி காவல்நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

கோவை செல்வபுரம், கல்லாமேடு மட்டசாலை பகுதியைச் சேர்ந்த முகமது அலி. இவரது மகன் அயூப் என்கிற அஷ்ரப் அலி, வயது 22. இவர் மீது சென்னை வேப்பேரி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்த வழக்கிற்காக சென்னையைச் சேர்ந்த சிபிசிஐடி காவலர்கள் இவரை தேடி கோவை வந்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. அருகில் இருந்த நபர்களிடம் இதுதான் அசரப் அலி வீடா என்பதை உறுதி செய்து கொண்டு அவரது வீட்டின் சுவரில் தலைமறைவு குற்றவாளி என்று அவருடைய புகைப்படத்துடன் கூடிய நோட்டீசை ஒட்டினர்.

மேலும் இவர் குறித்து செல்வபுரம் கல்லா மேடு பகுதியில் சிபிசிஐடி போலீசார் 5க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் வெடிகுண்டு சம்பவம் 1997 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் வேப்பேரி காவல் நிலைய காம்பவுண்ட் சுவர் தரைமட்டமாகியது. இதைத் தொடர்ந்து இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு குற்ற எண் 2996, 1997 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை இரண்டாவது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து இவருக்கு பிடிவாரண்ட் அளிக்கப்பட்டும் இவர் தலைமறைவாக பதுங்கி இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.

வருகின்ற 16/10/2023 காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் ஆஜராக வேண்டும் என்று அயூப் என்கிற அஷ்ரப் அலி சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் இதுபோன்ற தலைமறைவு குற்றவாளி என்று புகைப்படத்துடன் கூடிய நோட்டீசை ஒட்டி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT