பெங்களூரு முழு அடைப்புப் போராட்டம்: ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்
பெங்களூருவில் நடைபெற்றுவரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக ஓசூரில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்றுவரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக ஓசூரில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர், பெங்களூரு செல்லும் 11 அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காவிரிநீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சார்பில் பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இப்போராட்டத்தை முன்னிட்டு பெங்களூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்!
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதைக் கண்டித்தும், மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் செப்.26ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.