படம்: ட்விட்டர்/ஜெகன் மூர்த்தி 
தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி!

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

DIN

சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திராவிட தலைவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக தலைமை திங்கள்கிழமை அறிவித்தது.

மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்து எதிர்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுகவுடன் இணைந்து பணியாற்றிய புரட்சி பாரதம் கட்சி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதாக அக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கீழ்வைத்தினான்குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஜெகன் மூர்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

மரக்கடையில் திடீர் தீவிபத்து! தேக்கு மரங்கள் எரிந்து நாசம்! | Vaniyambadi

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

ஓட்டுநர்கள் கவனத்திற்கு!!! கார் மேற்கூரை வழி எட்டிப்பார்த்த சிறுவன் பலத்த காயம்!

ம.பி.யில் போலீஸார் சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்து: ஒருவர் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT