கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்டமாநிலங்களிலும் மகளிர் உரிமைத்தொகை தரப்படும் என தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மகளிரின் பொருளாதார முன்னேற்றத்துக்காக ‘மகளிர் சுயஉதவிக்குழு’ எனும் முன்னோடி திட்டத்தை நாட்டிலேயே முதன் முறையாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தருமபுரியில் தொடங்கி வைத்தார்.
மகளிரின் உழைப்பிற்கு ஓர் அங்கீகாரமாக செயல்படுத்தப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரியில் தொடங்கி வைத்தார் எனக் குறிப்பிட்டார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 500 மகளிருக்கு டெபிட் கார்டுகளை இன்று அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.