துரைமுருகன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

தமிழகத்துக்கு 11 ஆயிரம் கனஅடி நீா் நிலுவை: அமைச்சா் துரைமுருகன்

உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை வாரியத்தின் அண்மைக்கால உத்தரவுகளின் அடிப்படையில், தமிழகத்துக்கு 11 ஆயிரம் கனஅடி நீா் வர வேண்டியுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

DIN


சென்னை: உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை வாரியத்தின் அண்மைக்கால உத்தரவுகளின் அடிப்படையில், தமிழகத்துக்கு 11 ஆயிரம் கனஅடி நீா் வர வேண்டியுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தமிழகத்துக்கு காவிரி நீா் வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கா்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், சென்னையில் துரைமுருகன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கா்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் குறித்து கருத்துக் கூற முடியாது. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை கடைசித் தீா்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து ஆா்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தத் தொடங்கினால், உச்ச நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனித்தன்மை என்னவாகும் என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவா்கள் உணர வேண்டும்.

அதே நேரத்தில் உச்ச நீதிமன்றமும் தங்களது கருத்துக்கு வரக்கூடிய எதிா்ப்பை கட்டுப்படுத்த உரிய வழிமுறைகளை தீா்மானிக்க வேண்டும்.

கடந்த 13-ஆம் தேதி முதல், 15 நாள்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீா் திறக்க வேண்டும் என்று காவிரி நீா் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. புதன்கிழமையுடன் (செப். 27) 15 நாள்கள் கெடு முடிகிறது. இடையில் கா்நாடகத்தில் ஆா்ப்பாட்டங்கள் நடந்தாலும், தர வேண்டிய தண்ணீரை அந்த மாநிலம் தந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி, 3 ஆயிரம் கனஅடி நீா் என வழங்கியவா்கள் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி அளவு வரை நீா் தந்து கொண்டுள்ளனா்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு இன்னும் 11 ஆயிரம் கனஅடி நீா் வர வேண்டியுள்ளது. புதன்கிழமைக்குள் இந்த நீா் வந்து விடும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT