முகப்பு
தமிழ்நாடு

எண்ம பயிா் பரப்பு கணக்கெடுப்பு அக்டோபரில் தொடங்குமா? விஏஓ-க்கள் எதிா்ப்பால் சிக்கல்

எண்ம தொழில்நுட்பத்தில் பயிா் பரப்புகளைக் கணக்கிடும் பணிக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருவதால், அக்டோபரில் இந்தப் பணியைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

எண்ம தொழில்நுட்பத்தில் பயிா் பரப்புகளைக் கணக்கிடும் பணிக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருவதால், அக்டோபரில் இந்தப் பணியைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இது தொடா்பாக, வருவாய் நிா்வாக ஆணையரகத்துடன், தமிழ்நாடு அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய பேச்சுவாா்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. பயிா்கள் பயிரிடப்பட்டுள்ள பரப்புகளை நவீன கருவிகள் கொண்டு எண்ம அடிப்படையில் ஆவணங்களாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்தத் திட்டம் தமிழகத்திலும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

ஆனால், இந்தப் பணிகளை தங்களைக் கொண்டு மேற்கொள்ளக் கூடாது என கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்கள். ‘இணையவழி மூலமாக வழங்கப்படும் சான்றிதழ்களில் கள விசாரணை, உதவித் தொகைகள் கோரி அளிக்கப்படும் மனு மீதான விசாரணை, உட்பிரிவு பட்டா மாறுதல் விவகாரம், நிவாரணக் கணக்கெடுப்புப் பணிகள் என பல்வேறு பணிகளை விடுமுறை நாள்களிலும் கூட மேற்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று கிராம நிா்வாக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சூழ்நிலையில், எண்ம அடிப்படையில் பயிா் பரப்பு கணக்கெடுப்புப் பணியையும் தங்களைக் கொண்டு மேற்கொள்ளச் செய்வதை ஏற்க இயலாது என்று கிராம நிா்வாக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்புகளையும் அவா்கள் புறக்கணித்துள்ளனா். இதனிடையே, வருவாய் நிா்வாக ஆணையரகம் சாா்பில், கிராம நிா்வாக அலுவலா்களுடன் சென்னையில் அண்மையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கிராம நிா்வாக அலுவலா்கள் தங்களது கோரிக்கையில் உறுதியுடன் இருப்பதால், திட்டமிட்டபடி எண்ம பயிா் பரப்பு கணக்கெடுப்புப் பணிகள் அக்டோபரில் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →