முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5, 299 கன அடி

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து  வரும் மழை  குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5, 299 கன அடியாக சரிந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:


மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து  வரும் மழை  குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5, 299 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 38.10 அடியிலிருந்து 37.87அடியாக சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,070 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,299 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.01 டிஎம்சியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக  இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரியத் தொடங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →