தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

DIN


சென்னை: தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெள்ளிக்கிழமை (செப்.29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.29) அக்டோபர் 4 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT