தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை

DIN

மறுஉத்தரவு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், மீனவா்களின் பாதுகாப்புக் கருதி, மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளம், மீனவா் நலத் துறை அறிவுறுத்தியள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா அணியின் உரிமையாளரைப் புகழ்ந்த வருண் சக்கரவர்த்தி; எதற்காக தெரியுமா?

குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

SCROLL FOR NEXT