கோப்புப்படம் 
தமிழ்நாடு

மீனவர்களின் நலனுக்காக ரூ.1 கோடியில் சுழல் நிதி: தமிழக அரசு

மீனவர்களின் நலனுக்காக ரூ.1 கோடியில் சுழல் நிதி உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

DIN

மீனவர்களின் நலனுக்காக ரூ.1 கோடியில் சுழல் நிதி உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் எந்த வருமானமும் இன்றி வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்லும் நிலையில் உள்ளதால், மீனவர் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு, அம்மீனவர்களின் துயர் துடைக்க சுழல் நிதியினை உருவாக்கியுள்ளது. 

இந்த நிதியுதவியின் மூலம் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கும் பட்சத்தில் வாழ்வாதாரம், பொருளாதார ரீதியாக  மேம்படுத்திக் கொள்ள பேருதவியாக அமையும் என்பதால், 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம்  நிவாரணம் வழங்கிட ரூ.50 லட்சமும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்காக ரூ. 50 லட்சமும் ஆக மொத்தம் ரூ. 1 கோடி கொண்டு சுழல் நிதி உருவாக்கி உள்ளது.

இதற்காக அரசாணை (நிலை)எண். 112, கால்நடை பராமரிப்பு. பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்(மீன்6)துறை, நாள் 25.09.2023-ல் ஆணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT