மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது, மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது, மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.01 அடியிலிருந்து 53.15 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 3260 கன அடியிலிருந்து 9394 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: உங்கள் வாட்ஸ்-ஆப்பில் இந்த வசதி வந்துவிட்டதா?
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 19.85 டிஎம்சி ஆக உள்ளது.