முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்பட்டு வந்த திமுக, அதிமுக பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர்.

Updated On : 16 பிப்ரவரி, 2023 at 11:17 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:01 PM

ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்பட்டு வந்த திமுக, அதிமுக பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் பணிமனை அமைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அனுமதியின்றி செயல்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்பட்டு வந்த திமுகவின் 10 பணிமனைகள், அதிமுகவின் 4 பணிமனைகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Advertisement

துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினருடன் பணிமனைக்கு சீல் வைக்க வந்த தேர்தல் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.