முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் மார்ச் 5, 6-ல் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு!

மதுரையில் வருகின்ற மார்ச் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
கோப்புப்படம்
பகிர்:

மதுரையில் வருகின்ற மார்ச் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் ஆய்வு பிப்ரவரி 1, 2-ஆம் தேதிகளில் வேலூர் மண்டலத்துக்கு உள்பட்ட மாவட்டங்களிலும், பிப்ரவரி 15, 16-ஆம் தேதிகளில் சேலம் மண்டலத்துக்கு உள்பட்ட மாவட்டங்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

இந்நிலையில், வருகின்ற மார்ச் 5, 6-ஆம் தேதிகளில் மூன்றாவதாக மதுரை மண்டலத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

இந்த ஆய்வின்போது மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலப்பணித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →