தொடர்ந்து சரிந்துவரும் தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதே விலையில் நீட்டித்து வருவது நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதே விலையில் நீட்டித்து வருவது நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரி 22-ம் தேதி காலை நிலவரப்படி இன்றும் அதே விலையில் நீடித்துள்ளது.
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.5,275ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.72.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.