தமிழ்நாடு

ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஜடா முனீஸ்வரர் ஸ்ரீ காட்டு செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், பிரசாதம் விநியோகம் நடைபெற்றது. பின் விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, தத்துவார்சனை, தீபாராதனை, பிரசாத விநியோகம், நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பாபிஷேக தினமான புதன்கிழமை விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாசனம், இரண்டாம் காலையாக பூஜை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு, விமானம் மற்றும் ஜடாமுனீஸ்வரர் ஸ்ரீ காட்டு செல்லியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் புரோகிதர்கள் வேத மந்திரம் முழங்க கோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். பின் மகா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை சாமிரெட்டி கண்டிகை கிராம மக்கள்  சேர்ந்தவர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT