கடையநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தார்.
முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இவ்வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
இந்த நிலையில் கடையநல்லூர் இரசாலியாபுரம் முகமது இத்ரீஸ் என்பவரின் வீட்டில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.