தமிழ்நாடு

தரமான குடிநீர் வழங்கக் கோரி அவிநாசி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

அவிநாசியில் தரமான குடிநீர் வழங்கக் கோரி அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

அவிநாசி பேரூராட்சி பகுதிக்கு விநியோகிக்கும் குடிநீர் தரமானதாக இல்லாததால், தொடர்ந்து பொதுமக்கள் காய்ச்சல், சளி, தொன்டை வலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகவே, ஏற்கனவே பல ஆண்டுகளாக வழங்கி வந்த 2வது குடிநீர் திட்ட குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ந்து இலச்சினை வெளியீடு, தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்ட வியூகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, அவிநாசி பேரூராட்சி 13வது வார்டுக்கு உள்பட்ட காந்திபுரம், வாணியர் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றுமுதல் வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம்: அரசு மருத்துவா்கள்

11 மாவட்டங்களில் இன்று பனிமூட்டம்

இந்தியா முழுவதும் தீவிரமாகும் தெருநாய் தொல்லை: மாநிலங்களவையில் எழுப்பிய புதுச்சேரி பாஜக எம்.பி.

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்

2035-க்குள் வணிக விமானங்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயரும்!

SCROLL FOR NEXT