தமிழ்நாடு

சிங்கப் பெண்ணுக்கு 24 வயது! பிறந்தநாள் கொண்டாடும் சீரியல் நடிகை!

சிங்கப் பெண்ணே தொடரில் நடித்துவரும் நடிகை மணீஷா மகேஷ் இன்று தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

DIN

சிங்கப் பெண்ணே தொடரில் நடித்துவரும் நடிகை மணீஷா மகேஷ் இன்று தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சிங்கப் பெண்ணே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஆனந்தி என்ற முதன்மை பாத்திரத்தில் நடிகை மணீஷா மகேஷ் நடித்து வருகிறார்.

கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண், தனது குடும்ப பொருளாதாரத் தேவைகளுக்காக நகரத்துக்கு வேலைத்தேடி வந்து சந்திக்கும் இன்னல்களே சிங்கப் பெண்ணே தொடரின் கதைக்களமாகும்.

இந்தத் தொடரில் நடித்துவரும் மணீஷா மகேஷின் நடிப்பு பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் பிறந்த இவர் மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து மலையாளத் தொடரில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். 2020-ல் பாடாத பெண்கிளி என்ற மலையாளத் தொடரில் நடித்தார்.

அதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சிங்கப் பெண்ணே தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்ணான கண்ணே தொடரை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரை இயக்குகிறார்.

சிங்கப் பெண்ணே தொடர் எதிர்நீச்சல், கயல் போன்ற முன்னணி தொடர்களை பின்னுக்குத்தள்ளி டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது.

சிங்கப் பெண்ணே தொடரில் மணீஷா மகேஷின் காட்சிகள் அடிக்கடி சமூகவலைதளங்களில் பகிரப்படும். சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாய இயங்கக்கூடிய மணீஷா, இன்று தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொமதேகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த இளைஞா்கள்

கொல்லிமலை திடீா் சிற்றருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்

நாமக்கல் புறவழிச்சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தீவிரம்

தருமபுரியில் நாளை விசிக முப்பெரும் விழா: தொல்.திருமாவளவன் பங்கேற்பு

பள்ளிபாளையத்தில் பெண்களிடம் சிறுநீரக திருட்டு: இடைத்தரகா்கள் 2 போ் கைது

SCROLL FOR NEXT